முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்தில சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்தில நீ தானே
உத்தமி உன் பெயர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே
முத்து மணி மாலை ...
பழசு தான் மௌனம் ஆகுமா
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவ மூடுமா
மௌசு தான் கொறையுமா
நேசப்பட்டு வந்த பாச கொடிக்கு
காசிப் பட்டு சொந்தம் ஆகாதே
வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம் பூவுல வீசும் காத்தில
பாசம் தேடி மாமா வா
முத்து மணி மாலை ....
காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலி தான்
காவியம் பாடுதே
நெத்தி சுட்டி ஆடும் உச்சன் தலையில்
பொட்டு வச்சது யாரு நான் தானே
அத்தி மரப் பூவும் அச்சப்படுமா
பக்கத் துணை யாரு நீ தானே
ஆசை பேச்சுல பாதி மூச்சுல
லேசா தேகம் சூடேற
முத்து மணி மாலை .....
இன்னிசை பாடிவரும் , இளம் காற்றுக்கு உருவம் இல்லை ,
காற்றலை இல்லை என்றால் , ஒரு பாட்டொலி கேப்பதில்லை ,
ஒரு கானம் வருகையில் , உள்ளம் கொள்ளை போகுதே ,
ஆனால் காற்றின் முகவரி , கண்கள் அறிவதில்லையே ,
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான் ,
அதை தேடி தேடி தேடும் , மனதும் தொலைகிறதே ,
கண்ண இல்லை என்றாலோ , நிறம் பார்க்கமுடியாது ,
நிறம் பார்க்கும் உண் கண்ணை , நீ பார்க்க முடியாது ,
குயில் இசை போதுமே , அட குயில் முகம் தேவையா ?
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா ?
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் , கற்பனை தீர்ந்திவிடும் ,
கண்ணில் தோன்றா காட்சியில்தான் , கற்பனை வளர்ந்திவிடும் ,
அந்த பாடல் போல தேடல் கூட , ஒரு சுகமே
உயிரொன்று இல்லாமல் , ஊடல் இங்கு நிலையாதே ,
உயிரென பொருள் என்று , அலை பாய்ந்து திரியாதே ,
வாழ்க்கையின் வேர்களோ , மிக ரகசியமானது ,
ரகசியம் காண்பதே , நம் அவசியம் ஆனது ,
தேடல் உள்ள உயிர்களுக்கே , தினமும் பசி இருக்கும் ,
தேடல் என்பது உள்ள வரை , வாழ்வில் ருசியிருக்கும் ,
அந்த பாடல் போல தேடல் கூட , ஒரு சுகமே
ஆச பட்ட எல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும
நீயும்
அம்மாவ வாங்க முடியும
ஆச பட்ட எல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும
நீயும்
அம்மாவ வாங்க முடியும
ஆயிரம் உரவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்க முடியும
ஆயிரம் உரவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்க முடியும
உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கே யாருட
டெய்வம் ஒவ்வொரு வீடிலும் இருக்குதுன்ன தாய்யட
உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கே யாருட
டெய்வம் ஒவ்வொரு வீடிலும் இருக்குதுன்ன தாய்யட
ஆச பட்ட எல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும
நீயும்
ல ல ல....
பட்டினிய கெடந்தாலும்
பிள்ளைக்கு பால் கோடுப்ப
பாக் குடிக்கும் பிள்ள முகம்
பாத்தே பசி நெரப்ப
இள வட்டம் ஆன பின்னும்
எண்ண தேச்சு குள்ளிக்க வைப்ப
உச்சி முதல் பாதம் வர
உச்சி கொட்டி மகிழ்ந்திடுவ
நெஞ்சிலே நடக்க வைப்ப
நெலாவ பிடிக்க வைப்ப
பிஞ்சு விரல் நகம் கடிப்ப
பிள்ளை எச்சில் சோரு திம்ப
பல்லு முளைக்க
நெல்லு முனையால்
மெல்ல மெல்லதான் கீரி விடுவா
பல்லு முளைக்க
நெல்லு முனையால்
மெல்ல மெல்லதான் கீரி விடுவா
உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கே யாருட
டெய்வம் ஒவ்வொரு வீடிலும் இருக்குதுன்ன தாய்யட
ஆச பட்ட எல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும
நீயும்
அம்மாவ வாங்க முடியும
மண்ணில் ஒரு செடி மொளைச்ச
மண்ணுக்கு அது ப்ரசவம்தான்
உன்ன பெர துடி துடிச்ச
அன்னைக்கு அது பூகம்பம்தான்
சூரியன சுத்திகிட்டே
தன்னை சுத்தும் பூமி அம்ம
பெத்தெடுத்த பிள்ளையை சுத்தி
பித்து கொள்ளும் தாய்மை அம்ம
கர்பத்தில் நெளிந்த உன்னை
நுட்பமாய் தொட்டு ரசிப்ப
பேதை போல் அவள் இருப்ப
மேதையாய் உனை வளர்ப்ப
என்ன வேண்டும்
இனி உனக்கு
அன்னை மடியில் சொர்கம் இருக்கு
என்ன வேண்டும்
இனி உனக்கு
அன்னை மடியில் சொர்கம் இருக்குஸ்
உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கே யாருட
டெய்வம் ஒவ்வொரு வீடிலும் இருக்குதுன்ன தாய்யட
ஆச பட்ட எல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும
நீயும்
அம்மாவ வாங்க முடியும
ஆயிரம் உரவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்க முடியும
உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கே யாருட
டெய்வம் ஒவ்வொரு வீடிலும் இருக்குதுன்ன தாய்யட
ஆராரீரோ
ஆராரீரோ
ஆராரீரோ
ஆ ரா ரீ ரோ
ஆராரீரோ
ஆராரீரோ
ஆராரீரோ
ஆ ரா ரீ ரோ
என் உச்சி மண்டைல சுர்ரின்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது ..டர் ...
என் உச்சி மண்டைல சுர்ரின்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது ..டர் ...
கை தொடும் தூரம் காயச்சவளே
சக்கரையாலே செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே ..சுந்தரியே
தாவணி தாண்டி பார்த்தவனே
கண்ணாலே என்னை சாய்ச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே ..சந்திரனே
என் உச்சி மண்டைல சுர்ரின்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது ..டர் ...
மீய மீய பூனை நான் மீச வைச்ச யானை
கள்ளு கட பான நீ மயக்குற மச்சான
வில்லு கட்டு மீச என் மேல பட்டு கூச
ஆட்டு குட்டி ஆச உன் கிட்ட வந்து பேச
மந்திர காரி மாய மந்திர காரி
காகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன்
ஓவியமா உன் உருவம் வரைஞ்சிடுவேனே
உள்ளங்கையா நீ இருந்தா ரேகையாக நான் இருப்பேன்
ஆயுளுக்கும் உன் கூட இனஞ்சிருப்பேனே
என் உச்சி மண்டைல சுர்ரின்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது ..டர் ...
அஞ்சு மணி பஸ்சு நான் அத விட்டா மிஸ்ஸு
ஒரே ஒரு கிஸ்ஸு நீ ஒத்துகிட்டா எஸ்ஸு
கம்மன்கர காடு நீ சுட்டா கருவாடு
பந்திய நீ போடு நான் வரேன் பசியோடு
மந்திர காரா மாய மந்திர காரா
ஹே அப்பாவியா மூஞ்ச வெச்சு
அங்க இங்க கைய வெச்சு
நீயும் என்ன பிச்சு தின்ன கேக்குறியே டா
துப்பாக்கியா மூக்க வெச்சு
தோட்ட போல மூச்ச வெச்சு
நீயும் என்னை சுட்டு தள்ள பாக்குறியே டீ
என் உச்சி மண்டைல சுர்ரின்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டிர்ருன்குது ..டர்ருன்குது ...
என் உச்சி மண்டைல சுர்ரின்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டிர்ருன்குது ..டர்ருன்குது ...
கை தொடும் தூரம் காயச்சவளே
சக்கரையாலே செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே ..சுந்தரியே
தாவணி தாண்டி பார்த்தவனே
கண்ணாலே என்னை சாய்ச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே ..சந்திரனே
என் உச்சி மண்டைல சுர்ர் ..சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கையிலே கிர்ர் ..கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே டிர்ர் ..டர் ...
பாடல்: ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
குரல்: ஜெயசந்திரன்
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது (2)
பொழுதாகிப் போச்சு வௌளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது
(ராசாத்தி)
கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிலையே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே
(ராசாத்தி)
மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன?
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்
(ராசாத்தி)
ஒவ்வொரு பாடலிலும் ,
ஒவ்வொரு நினைவிருக்கு ,
உள்ளுக்குள் வழியிருக்கு ,
நெஞ்சே ,
ஒவ்வொரு பாடலிலும் ,
ஒவ்வொரு நினைவிருக்கு ,
உள்ளுக்குள் வலியுருக்கு ,
நெஞ்சே ,
இசை நெஞ்சே ,
காதலின் கனவுகளை ,
கண்ணீரின் நினைவுகளை ,
பாடல்கள் சுமந்துவரும் ,
நெஞ்சே ,
இசை நெஞ்சே ,
ஒ -ஹோ -ஹோ ,
வெட்டோடு பொருந்தும் வார்த்தை ,
எதுவென்று தாய் மொழி அறியும் ,
நெஞ்சோடு பொருந்தும் வாழ்கை ,
எதுவென்று யாருக்கு தெரியும் ?
வலி போக எந்தன் பாடல் ,
வார்த்தை கொண்டு வரும் ,
யாருக்கு மாலைகள் ஆவதென்று ,
பூங்கொடிகள் பூக்கள் பூப்பதில்லை ,
யாருக்கு யார் சொந்தம் ஆவதென்று ,
தேவதைகள் வந்து சொல்வதில்லை ,
விதியென்ற காட்டிலே ,
திசை மாறும் வாழ்க்கையே ,
போகிற போக்கில் பாதைகள் கண்டு விடு ,
எண்ணம் போல வாழ்க்கையே ,
எவருக்கும் வாய்ப்பதில்லை ,
வாழ்கை போல எண்ணங்கள் ,
வாழ்வதும் துயரமில்லை ,
ஒ -ஹோ -ஹோ , ரோஜாவின் கண்ணீர் தானே ,
அதறாய் வாசம் கொள்ளும் ,
கண்ணோடு பொறுமை காத்தால் ,
காலம் பதில் சொல்லும் ,
பந்தங்கள் பாசங்கள் என்பதெல்லாம் ,
தேகங்களாய் நம்பி வாழ்வதில்லை ,
உயிர் கொண்ட வேர்களின் ஆழங்களில் ,
காதல் வலி அன்பு என்றும் காய்வதில்லை ,
உருவங்கள் தாண்டியும் ,
உள்ளங்கள் வாழுமே , அண்டம் மறையும் ,
அன்பே நித்தியமே ,
எந்த மேடை என்பதை ,
அன்பே மறந்துவிடு ,
ஏற்றிக்கொண்ட பாத்திரம் ,
அதிலே கரைந்துவிடு ,
ஒ -ஹோ-ஹோ, நீர் கொண்ட மஞ்சள் வாழ்க ,
நிழல் தந்த சொந்தம் வாழ்க,
கல்யாண மாலை நனைத்த ,
கண்ணீர் துளி வாழ்க ,
ஒவ்வொரு பாடலிலும்.....
ஆட்டமா தேரொட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைதான் எண்ணிதான் கன்னி நான்
ஆடுரேன்..வலை போடுரேன்
பாடுரேன்.. பதில் தேடுரேன்..
யெ.. ரம்பா சம்பா சம்பாதான்..
அம்மா பொண்ணு ரம்பாதான்..
சம்பா ரம்பா சம்பாதான்..
ரம்பா சம்பா ரம்பாதான்... ஹோய்...
(ஆட்டமா)
யேராத மேடை இங்கே இளமானும் யேரி
அடத சதிராட்டம் உனக்காக ஆடி
யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி
அம்மாடி வளைதேனே கணக்காக தேடி
ராக்கோழி சதம் கேட்குது - என் ராசாவே
பூ வாசம் வட்டம் போடுது
வீராப்பு கண்ணில் பட்டது - நே எனை தேட
மாராப்பு மெல்ல சுட்டது
பொன் மானும் துள்ளி துள்ளீ கொண்டாட்டம் போடதோ
புண்ணான நெஞ்சில் இன்ரு காயங்கள் ஆரதோ
கன்னியின் யெண்ணம் முடிவது திண்ணம்.. வா.... ஹா.. ஹா...
(ஆட்டமா)
யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிசு
நீ வந்து சுகமாக்கி தர வேனும் முடிசு
நான் உன்னை காணாமல் நூலாக இளைசு
நீ செல்லும் தடம் பாது வலை போட்டு வளசு
கண்ணாலே கட்டி வைக்கவா.. அட மாமா யென்
கையாலே பொட்டு வைக்கவா
பூ பந்தல் போட சொல்லவா - அட மேளங்கள்
தாளங்கல் சொல்லி தட்டவா
பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்கோலம் கான்பொமா
போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்பொமா
கன்னியின் யெண்ணம் முடிவது திண்ணம்.. வா.... ஹா..
(ஆட்டமா)
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னதன்பே
காதல் என உயிரும் சொன்னதன்பே
என் பெயரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த
பேர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால வந்தது அந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன்னிடத்தில் உருகி நின்றது
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே ஒளி தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையாய் இல்லை
புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்
என்னை நீ மாற்றினாய்
எங்கும் நிறம் பூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
உன்னை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என்கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்னப்பார்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சுப்போச்சே நகரவே இல்ல
திண்ணச்சோறும் செறிக்கவே இல்ல
கொழம்பு வேணான்னு
உன் ஆச அடிக்கிறக்காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம் உம்பேரக் கேட்கிறதே
(ஐயய்யோ..)
உன்னத் தொடும் அணல் காத்து
கடக்கையிலப் பூங்காத்து
கொழம்பித்தவிக்குதடி எம்மனச..
ஓ திருவிழா கடைகளைப்போல
தெனருறேன் நான் தானே
எதிரில் நீ வரும்போது
நனனன ஏன் தானோ
கண் சிமிட்டும் தீயே என்னை எரிச்சிப்புட்ட நீயே
ஹோ ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
ஹோ எம்மேல நிலா ஒளிருதடி
மழைச்சாரல் விழும் வேல
மண் வாசம் மன வீச
ஒம்மூச்சைத் தொடவே நான் மிதந்தேன்
கொழைகிற அடிக்கிற மழையா
நீ என்னை நனைச்சாயே
இருட்டுல அணைக்கிற சுகத்தை
பார்வையிலக் கொடுத்தாயே
பாதைக்கத்தி என்னை ஒருப்பார்வையாலக்கொன்ன
ஊரோட வாழுறப்போதும்
யாரோடும் சேரலதான்
(ஐயய்யோ..)
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
(பூவே )
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோரும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
(பூவே )
உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
எந்நாளும் எந்நாளும் உல்லாசம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதனொரு பூவின் மடல்
(பூவே )